17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை ஆவினில் துணை மேலாளராக பணி புரிந்த புகழேந்தி தற்கொலை.

மதுரை ஆவினில் துணை மேலாளராக பணி புரிந்த புகழேந்தி தற்கொலை.

எழுதியவர்: mohan March 11, 2020, 4:42 pm

மதுரை ஆவின் பால்பண்ணையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அதில் (வளர்ச்சி திட்டம்) துணை மேலாளராக ஒத்தக்கடையை சேர்ந்த புகழேந்தி என்பவர் வேலை பார்த்து வந்தார்.இவர் மதுரை ஆவின் பால்பண்ணையில் 40 லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக ஆவின் நிர்வாகம் இவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்துள்ளது. அதோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பணியிடை நீக்கத்திற்கான உத்தரவு நகலை புகழேந்தியிடம் கொடுத்துள்ளனர்.இதனால் மன அழுத்தத்தில் இருந்த புகழேந்தி  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை அவர் அறையின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்ததால் அவரது மனைவி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து பார்த்த போது புகழேந்தி தூக்கில் தொங்கியுள்ளார்.இது குறித்து ஒத்தக்கடை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் புகழேந்தியின் அறையை சோதனையிட்டபோது அவர் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் புகழேந்தி மன அழுத்தத்தின் காரணமாக இறந்தாரா? குடும்ப பிரச்சனை காரணமாக இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!