17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய மாநில அரசுகளின் போக்கை கண்டித்து செங்கோட்டை காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

மத்திய மாநில அரசுகளின் போக்கை கண்டித்து செங்கோட்டை காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

எழுதியவர்: mohan March 11, 2020, 1:02 pm

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு, மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரெசவுமுகம்மது தலைமை வகித்தார். நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.பழனி நாடார் முன்னிலை வகித்தார். தென்காசி நகர சிறுபான்மைப் பிரிவு தலைவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் பாக்யராஜ் ஆகியோர் வரவேற்று பேசினர்.

துவக்க உரையினை செங்கோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமர், மற்றும் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பூபதி ராஜா, ஆகியோர் வழங்கினர்.இந்திய தேசிய காங்கிரஸ் தேசிய ஊடகப்பிரிவு செயலாளர் ரமணி, செல்வப்பெருந்தகை, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தலைவர் எஸ் எம் பாக்கர் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட தலைவர் டேனி அருள் சிங் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் எஸ் ஆர் பால்துரை, கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசின் கருப்பு சட்டங்களை ரத்து செய்யக்கோரியும்,அதற்கு துணைபோகும் மாநில அரசை கண்டித்தும் கண்டன உரையாற்றினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!