17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வருவாய்த்துறையினர் அலட்சியம். எய்ம்ஸ் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொய்வு..

வருவாய்த்துறையினர் அலட்சியம். எய்ம்ஸ் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொய்வு..

எழுதியவர்: mohan March 11, 2020, 12:41 pm

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் 90% நிறைவடைந்த நிலையில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்து கொடுக்காததால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர் .மதுரை தோப்பூரில் 224.24 எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது தொடர்ந்து கடந்த வருடம் ஜனவரி மாதம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று தொடங்கி வைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாததால் மருத்துவமனை அமையுமா?என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர் இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்காக முதற்கட்டமாக ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது மேலும் இப்பகுதியில் 6கிலோ மீட்டர் தூரத்திற்கு 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரிவாக்கத்திற்காக மத்திய சுகாதாரத் துறையினர் தமிழக வருவாய்த் துறையிடம் கூடுதலாக 20 ஏக்கர் ஒதுக்கீடு செய்ய வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூடுதலாக 20 ஏக்கர் நிலம் தர ஒப்புக் கொண்டனர் இந்நிலையில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 ஏக்கர் நிலம் தர ஒப்புதல் கொடுக்கப்பட்டு நான்கு மாத காலமாகியும் இதுவரை வருவாய்த்துறையினர் இந்த இடத்தை அளவீடு செய்து ஒதுக்கி கொடுக்காததால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் தயவு ஏற்பட்டுள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர் மேலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி 90% நிறைவு பெற்ற நிலையில் 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யாததால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மேலும் தாமதமாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!