18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சொகுசு காரில் நூதன முறையில் கேரளாவிற்கு கடத்தப்பட்ட 50 கிலோ எடையுள்ள 11 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்-புளியரை சோதனை சாவடியில் சிக்கியது..

சொகுசு காரில் நூதன முறையில் கேரளாவிற்கு கடத்தப்பட்ட 50 கிலோ எடையுள்ள 11 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்-புளியரை சோதனை சாவடியில் சிக்கியது..

எழுதியவர்: mohan March 11, 2020, 12:35 pm

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு புளியரை வழியாக பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் இன்று கேரளாவிற்கு செல்லும் ஒரு சொகுசு காரில் நூதன முறையில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தனிப்பிரிவு காவலர் மஜித்திற்கு தகவல் கிடைத்தது.அதனைத் தொடர்ந்து மஜித் தலைமையில் காவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளா செல்ல முயன்ற சொகுசு காரை சந்தேகமடைந்து சோதனை செய்த போது அதில் இருக்கைக்கு பின்னால் மறைத்து வைத்திருந்த 50 கிலோ எடை உள்ள 11 மூடைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து சொகுசு காரை ஓட்டி வந்த வல்லம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பரை காவல்துறையினர் கைது செய்தனர். ரேசன் அரிசியை ஏற்றி வந்த சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!