18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விபத்து இழப்பீட்டு தொகையை வசூல் செய்து தராத திண்டுக்கல் மேற்கு வருவாய்த்துறையை கண்டித்து முற்றுகை போராட்டம்..

விபத்து இழப்பீட்டு தொகையை வசூல் செய்து தராத திண்டுக்கல் மேற்கு வருவாய்த்துறையை கண்டித்து முற்றுகை போராட்டம்..

எழுதியவர்: Askar March 11, 2020, 10:08 am

விபத்து இழப்பீட்டு தொகையை வசூல் செய்து தராத திண்டுக்கல் மேற்கு வருவாய்த்துறையை கண்டித்து முற்றுகை போராட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஓட்டக்கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு கடந்த 2004ம் ஆண்டு ஏற்ப்பட்ட விபத்திற்கு இழப்பீட்டுதொகையை வசூல் செய்துதராத திண்டுக்கல் மேற்கு வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து 10.03.2020 அன்று காலை முதல் மாலை வரை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திரனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர் K.S.பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்வநாயகம், மாவட்ட செயலாளர் பகத்சிங், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவள்ளி, நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் பஞ்சு உள்ளிட்ட நிர்வாகிகளோடு 150க்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திரனாளிகள் பங்கேற்றனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற போராட்டத்தை ஒட்டி சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் விபத்து இழப்பீட்டு தொகையை தராத நபருக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் மூன்று தினங்களுக்குள் கட்டாயம் விபத்து இழப்பீட்டு தொகையை வசூல் செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!