17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் சத்தியம் கல்லூரியில் தமிழ் இயக்கம் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது..

செங்கம் சத்தியம் கல்லூரியில் தமிழ் இயக்கம் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது..

எழுதியவர்: Askar March 11, 2020, 10:02 am

செங்கம் சத்தியம் கல்லூரியில் தமிழ் இயக்கம் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது..

திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் அடுத்த கரியமங்கலம் சுண்டக்கப்பாளையம் சத்தியம் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இயக்கம் தொடக்கவிழா நடைபெற்றது. கல்லூரி தலைவர் பேராசரியர் வணங்காமுடி தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் முகமது வரவேற்றுபேசினார் பேராசிரியர் அப்துல்காதர் தமிழ் இயக்கத்தை தொடங்கிவைத்தும் தமிழ்மொழியின் சிறப்புகள் வரலாறுகள் தமிழ் இயக்கத்தின் வரலாறு அதில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து பேசினார். தொடர்ந்து புலவர் பதுமனார் தமிழ் இயக்க மாவட்ட செயலாளரும் திருவண்ணாமலை கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவருமான மாதவ சின்னராஜ் தீத்தாண்டப்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது முடிவில் தமழ்த்துரை தலைவர் துளசி நன்றி கூறினார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!