17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரானா அச்சுறுத்தல் இருந்த போதும் வழக்கம் போல நாடு முழுவதும் களை கட்டிய ஹோலி!

கொரானா அச்சுறுத்தல் இருந்த போதும் வழக்கம் போல நாடு முழுவதும் களை கட்டிய ஹோலி!

எழுதியவர்: Askar March 11, 2020, 9:40 am

கொரானா அச்சுறுத்தல் இருந்த போதும் வழக்கம் போல நாடு முழுவதும் களை கட்டிய ஹோலி!

கொரோனா அச்சுறுத்தலை தண்டியும் வழக்கம் போல நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக நாடு முழுவதும் ஹோலி கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல சென்னையில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வேப்பேரி, சௌகார்பேட்டை, எழும்பூர், யானைகவுனி உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி களைகட்டியது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வண்ணப் பொடிகள் பூசியும், வண்ணம் கலந்த நீர் தெளித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேபோல இந்தியாவின் பிற பகுதிகளான டெல்லி, மும்பை, ராஜஸ்தான், குஜராத், பீகார் உள்ளிட்ட இடங்களிலும் ஹோலி பண்டிகை களை கட்டியது.

ராஜஸ்தானில் வெளிநாட்டினர் கலந்து கொண்டு, வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ந்தனர்.

பஞ்சாப்பில் ஒருவரையொருவர் இனிப்புகளை பரிமாறி வசந்த காலத்தை வரவேற்றனர்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அவரது இல்லத்தில் ஹோலியை பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தார்.

மத்திய பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற உஜ்ஜையினி மகாகளி கோயிலில் ஹோலி பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!