17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்…! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்!

வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்…! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்!

எழுதியவர்: Askar March 10, 2020, 11:38 pm

வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்…! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்!

சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம் உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பில் பயிலும் செல்வராஜ் என்ற மாணவர் தன்னுடைய வகுப்பு ஆசிரியருக்கு விடுமுறை வேண்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடிதத்தில், தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரக் கூடிய சூழ்நிலையில் தனக்கு சளி மற்றும் காய்ச்சல் இருப்பதால் நீண்ட விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறையின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள மாணவர், தான் வகுப்பிற்கு வந்தால் மற்ற மாணவர்களுக்கு காய்ச்சல் பரவும் என்பதால், வகுப்பு நண்பர்களின் நலன் கருதி தான் நீண்ட மருத்துவ விடுமுறை எடுத்துக் கொள்வதாகவும் கடிதத்தில் மாணவர் தெரிவித்துள்ளார்.­

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!