17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அந்தனூர் அரசு பள்ளியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது!

அந்தனூர் அரசு பள்ளியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது!

எழுதியவர்: Askar March 10, 2020, 9:56 pm

திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் ஒன்றியம் அந்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் மற்றும் பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்சசிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மனோகரன் தலைமைதாங்கினார் உறுப்பினர்கள் கோவிந்தன் சக்கரபாணி பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தார் தலைமை ஆசிரியை பாரதி வரவேற்றுபேசினார் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மனோகரன் சான்றுகள் பரிசுகள் வழங்கினார். இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் 100சதவீத தேர்சிபெற ஆசிரியர்கள் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் பள்ளியின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு பாடுபடவேண்டும் என தீர்மாணிக்கப்பட்டது நிகழ்ச்சியில் இளங்கோவன் சுந்தரவதனம் செந்தமிழ்செல்வன் வின்சன்ட் சத்தியகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!