17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளித்து மக்களின் மனதை வென்ற மாவட்ட ஆட்சியர் – தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இதனை விரிவு படுத்திட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை..!

மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளித்து மக்களின் மனதை வென்ற மாவட்ட ஆட்சியர் – தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இதனை விரிவு படுத்திட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை..!

எழுதியவர்: Askar March 10, 2020, 7:13 pm

மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளித்து மக்களின் மனதை வென்ற மாவட்ட ஆட்சியர் – தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இதனை விரிவு படுத்திட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை..!

வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திண்டுக்கல்லில் மனுநீதி நாள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிக்க மாவட்டம் முழுவதும் இருந்து ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் வருகை தருவார்கள். இவ்வாறு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் மனுக்களை அளிக்க மதியம் உணவு வேளை வரையும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மிகுந்த கஷ்டப்பட்டு மனு அளிக்க வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து விட்டு பசியோடு வீட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருகைதரும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒரு வேளை மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு ஆண்டுகளாக தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மனு அளிக்க வருகைதரும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உணவு வழங்க உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் கடந்த மூன்று வாரங்களாக திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருகைதரும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து TARATDAC-சங்கத்தின் நிர்வாகிகள் கூறும் போது,சங்கத்தின் தொடர் கோரிக்கைக்கு கிடைத்துள்ள வெற்றி என்றனர். மேலும் மனு அளிக்க வருகைதரும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உணவு வழங்க உத்தரவிட்டு நடைமுறைப்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் பாராட்டி வரும் நிலையில், திருநெல்வேலி,தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், திண்டுக்கல் ஆட்சியரை போன்று மனு அளிக்க வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும் என்பதே அனைத்து பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!