மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை VOC பாலம் அடியில் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி இருந்தார். இதை பார்த்த பொதுமக்கள் மதுரை எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருகே சென்று பார்த்தபோது அவர் விஷமருந்தி உயிரிழந்தது தெரிய வந்திருந்தது. அருகிலேயே 2 பாலிடால் பாட்டில் இருந்தது. விசாரணையில் அவர் மதுரை பைபாஸ் சாலையில் ஒரு தனியார் கம்பி தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் ரவிச்சந்திரன் 58 தெரியவந்தது. இவர் மதுரை காக்கா தோப்பு தெரு வசித்து வருகிறார் .இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் .மேலும் பிரேதத்தை நேதாஜி ஆம்புலன்ஸ் மூலமாக உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.