18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நரியம்பட்டி தார் சாலையின் தரம் ஆராயப்பட வேண்டும் .58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் சார்பாக கோாிக்கை.

நரியம்பட்டி தார் சாலையின் தரம் ஆராயப்பட வேண்டும் .58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் சார்பாக கோாிக்கை.

எழுதியவர்: mohan March 10, 2020, 5:31 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வட்டாச்சியா்  அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில் விவசாயிகளுக்கு எந்தவித அழைப்பும் சரியாக கொடுக்கவில்லை மற்றும் அதிகாரிகள் குறைந்த அளவிலே வருகை தந்திருந்தனர் .இது குறித்து மதுரை மாவட்ட நன்செய் புன்செய் விவசாய சங்கம் மற்றும் 58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் சார்பாக இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு முறையான அழைப்பு மற்றும் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.மற்றும் 58 கிராம கால்வாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் 7 கி.மீ தூரத்திற்கு தடுப்பு உடனடியாக அமைத்து தருகிறோம் என்றார்கள். இதுவரை அதற்கான முயற்சி எதுவும் இல்லை கடைசி காலங்களில் அமைப்பதை விட உடனே சிமெண்ட் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட்டியபட்டி லிருந்து அய்யம்பட்டி வழியாக உபரிநீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நத்தம் போரம்போக்கு இடங்களை அடையாளப்படுத்திட வேண்டும் அதில் விவசாய சங்கம் சார்பில் அடர்வனம் அமைக்கப்படும்.மற்றும் சித்தர்மலை மகாலிங்கம் கோவில் பொதுமக்கள் தங்கு தடையின்றி செல்ல மற்றும் குடிநீர் வசதிகள் மற்றும் விளக்குகள் அமைத்து தர வேண்டும்..58 கிராம கால்வாய் பொத்தல் ஏற்பட்டு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மண் தரத்தை பரிசோதனை செய்திட வேண்டும்.மற்றும் நரியம்பட்டி முதல் அய்யம்பட்டி வரையிலான தார் சாலை அமைக்கும் பணியில் விவசாயிகள் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்..தார் சாலையின் தரம் ஆராயப்பட வேண்டும்..எனபது  உள்பட பல கோாிக்கைகள் மதுரை மாவட்ட நன்செய் புன்செய் விவசாய சங்கம் மற்றும் 58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் சார்பாக சௌந்திரபாண்டி உள்பட இளைஞா்கள் கலந்து கொண்டு கோாிக்கை விடுத்துள்ளனா்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!