18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் பாதை சார்பாக மகளிர் தின விழா

மக்கள் பாதை சார்பாக மகளிர் தின விழா

எழுதியவர்: mohan March 10, 2020, 1:42 pm

மக்கள் பாதை சார்பாக உலக மகளிர் தின விழா  பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.ஆயிர வைசிய மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் ஜெயபிரமிளா வரவேற்றார்.இராமநாதபுரம் மாவட்ட மகளிரணி துணை ஒருங்கிணைப்பாளர் கோகிலா தலைமை தாங்கி மகளிர் தினக் கொண்டாட்டங்கள் சமுதாய மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் என சிறப்புரை ஆற்றினார்.ஆயிர வைசிய சபையை சேர்ந்த போஸ், நாகு, கண்ணன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் மீன் மக்கள் பாதையை பற்றியும் , சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு என்ன என்பதை பற்றியும் எடுத்துரைத்தார்.மாவட்ட நீதி திட்ட றுப்பாளர் சந்திரசேகர் கலந்து கொண்டு நேர்மையான சமூகத்தை உருவாக்க மகளிர் ஒன்றுபட வேண்டுமென வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக ஆயிர வைசிய மெட்ரிகுலேசன் பள்ளி துணை முதல்வர் கவிதா, அல்போன்சா, சங்கமித்ரா,காயத்ரி,மரியா ஆக்னெஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.இந்த நிகழ்வில் வழக்கறிஞர் பசுமலை , ஆசிரியர் சேவியர், கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!