18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் தினம்

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் தினம்

எழுதியவர்: mohan March 10, 2020, 1:22 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரெஜினாநாயகம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினார்கள் . ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ் வரவேற்று பேசினார்.

பெண்கள் தினத்தில் பெண்களுக்கான இன்றைய சட்டதிட்டங்கள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகள் வழங்கப்பட்டது.    இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி) குணவதி, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தண்டபாணி நல்லதம்பி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!