17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கோலப்போட்டி

இராமநாதபுரத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கோலப்போட்டி

எழுதியவர்: mohan March 10, 2020, 12:28 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் 1,454 அங்கன்டி மைய பணியாளர்கள் மூலம் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகளை கணக்கிட்டு ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மகளிருக்கு ஏற்படும் ரத்த சோகை, எடை குறைவான குழந்தை பிறப்பு, 0-6 வயது குழந்தைகள் உடல் மெலிவு மற்றும் உயரத்திற்கேற்ற எடையின்மை உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டில் மார்ச் 8 முதல் மார்ச் 22 வரை ஊட்டச்சத்து இரு வார விழா கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊராட்சி அளவில் ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அதனடிப்படையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் “அனைவருக்கும் ஊட்டச்சத்து அதுவே நம் சொத்து” என்ற தலைப்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோலப்போட்டி நடந்தது. இப்போட்டியில் நயினார்கோவில், ராமநாதபுரம்,, திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் முதல் மூன்று பரிசு பெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கேடயம் வழங்கினார்.மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வி.ஜெயந்தி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!