18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மராத்தான் போட்டி நடைபெற்றது

இராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மராத்தான் போட்டி நடைபெற்றது

எழுதியவர்: mohan March 10, 2020, 12:10 pm

மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளை ஒழுக்கும் வகையில் இராமநாதபுரத்தில் முதன்முறையாக. மகளிருக்கான. மராத்தான் நடைபெற்றது. இப்போட்டியினை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்  மனைவியுடன் வருகை தந்து விழாவினைத் தொடங்கி வைத்தார். செய்யதம்மாள் மருத்துவமனையின் மருத்துவர்  சானா பாத்திமா  ஒருங்கிணைக்கப்ட்ட. சுமார் 1200 பெண்கள் கலந்துகொண்டனர்.

5கிலோ மீட்டர் இலக்கு கொண்ட இம்மாராத்தான் சி.பி.எஸ்.இ. பள்ளி (பேராவூரணி) யில் தொடங்கி நேஷனல் அகாடமி பள்ளியில் (பட்டிணங்காத்தான் முடிவுற்றது ) இதில் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  வீரராகவ ராவ்  பரிசுகள் வழங்கி கெளரவித்தார். முதல் பரிசினை சுமித்ரா என்ற பெண்ணும் 2 பரிசினை அனித்ராவும் 3 மூன்றாம் பரிசினை சினேகாவும் 4 பரிசினை பவித்ராவும் 5 பரிசினை மெளனிகாவும் சிறந்த வெற்றியாளராக செல்வி சுஜிதாவும் பரிசினை பெற்றனர். இவ்விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தவர்கள் நேஷனல் அகாடமி பள்ளிகள் செய்யதம்மாள் சி.பி.எஸ்.இ. பள்ளி. ஐஸ்வர்யா பேக்கரி எம்.ஆர்.டிரேடர்ஸ் சுபலெட்சுமி பஜாஜ் ஆனந்தம் சில்க்ஸ் ஆப்டிக்கல் பேலஸ் மற்றும் பெஸ்ட் மம்மி பேக்கரி ஆகியோர்க்கு நன்றி கூறி விழா நிறைவுபெற்றது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!