17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஐஎம்ஏ மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம்

சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஐஎம்ஏ மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம்

எழுதியவர்: mohan March 10, 2020, 11:50 am

தென்காசி மாவட்டம் குற்றாலம் கிளை இந்திய மருத்துவ கழகம், குற்றாலம் டாக்டர்கள் டிரஸ்ட், நாகர்கோவில் மூகாம்பிகை மருத்துவமனை மற்றும் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து அனைத்து நோய்களுக்குமான பொதுமருத்துவ இலவச சிகிச்சை முகாம் சேர்ந்தமரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.மருத்துவ முகாமினை சங்கரன்கோவில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணன், இதயவியல் டாக்டர் வெங்கடேஷ் பாபு, தலைமையாசிரியர் சுப்பிரமணிய துரை ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் குற்றாலம் கிளை இந்திய மருத்துவ கழக மருத்துவர்களான சுரண்டை, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், ஆகிய பகுதியைச் சார்ந்த அனைத்து மருத்துவர்கள் மற்றும் நாகர்கோவில் மூகாம்பிகை மருத்துவமனை மருத்துவர்கள், கலந்துகொண்டு 745 நோயாளிகளுக்கு பரிசோதனைகள் செய்து இதய நோய்களுக்கான ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட், பைபாஸ் அறுவை சிகிச்சை ஆலோசனைகள், சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சை, எலும்பு முறிவு, குழந்தையின்மை, பொது மருத்துவம், சர்க்கரை நோய், மகப்பேறு மருத்துவம், காது மூக்கு தொண்டை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, கண்நோய், பிசியோதெரபி மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை அளித்தனர்.

மேலும் இதய நோய்களுக்கான எக்கோ, இஜிசி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், மற்றும் ரத்தப் பரிசோதனைகள் இலவசமாக செய்து மருந்துகள் வழங்கினர்.மருத்துவர்கள் தங்கப்பாண்டியன், மூகாம்பிகை மருத்துவ குழும அறங்காவலர் மூகாம்பிகா, வெங்கடேஷ் பாபு, கிரிஷ், ராகவேந்திரா அஸ்ரன்னா, பாலாஜி, வித்யா, மமதா, இளங்கோ, வேதமூர்த்தி, முருகையா, மோகன்ராவ், லோகநாதன், ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் ஆனி ஹோல்டா எலிசபெத், பிசியோதெரபிஸ்ட் சுப்புலெட்சுமி, நெல்லை அகர்வால் கண்மருத்துமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை இந்திய மருத்துவ கழக குற்றாலம் கிளையின் தலைவர் டாக்டர் பாலாஜி, செயலாளர் ராகவேந்திரா அஸ்ரன்னா, பொருளாளர் இளங்கோ மூகாம்பிகா மருத்துவமனை மருத்துவர்கள் பிஆர்ஓ அருள்முருகன், கோட்டைசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இந்த மருத்துவ முகாமில் உள்ளூர்,வெளியூர், சுற்று வட்டார பொது மக்கள் கலந்து கொண்டு இலவச பரிசோதனைகள், சிகிச்சைகள் மூலம் பயன்பெற்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!