17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிணற்றில் விழுந்த பூனையை மீட்ட தீயணைப்பு துறையினர்

கிணற்றில் விழுந்த பூனையை மீட்ட தீயணைப்பு துறையினர்

எழுதியவர்: mohan March 10, 2020, 11:45 am

மதுரை மாவட்டம் சிம்மக்கல் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் பொதுமக்களால் மீட்க முடியவில்லை. பின் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த வெங்கடேசன்  தலைமையிலான குழுவினர் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் கயிற்றை தீயணைப்பு வீரர் ஒருவர் இறங்கி பூனையை உயிருடன் மீட்டனர். சாதாரண பூனை என்று நினைக்காமல் தன் உயிரை துச்சமாக நினைத்து பூனையை காப்பாற்றியது அப்பகுதி மக்களை நெகிழ செய்தது. பூனையை காப்பாற்ற தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!