18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தரமற்ற சாலை. கீழே விழும் இருசக்கர வாகனம். பொதுமக்கள் வேதனை

தரமற்ற சாலை. கீழே விழும் இருசக்கர வாகனம். பொதுமக்கள் வேதனை

எழுதியவர்: mohan March 10, 2020, 11:31 am

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 92 ஆவது வார்டு கோவலன் நகர் டிவிஎஸ் லட்சுமி நகர் ரமண ரிஷி கார்டன் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் புதிய சாலை அமைக்கப்பட்டது . ஆனால் வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று அடுத்த நிமிடம் வாகனம் கீழே விழுந்துள்ளது என்ன என்று பார்த்தால் தார் உருகி மிகப்பெரிய பள்ளம் விழுந்து வீட்டு வாசலில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனம் திடீரென கீழே விழுந்து உள்ளது .பின் அந்த சாலை முழுவதும் ஆராய்ந்து பார்த்தபோது மிக மிக மோசமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் சாலை பெயர்ந்தும் உள்ளது. மேலும் 93 வது வார்டு டிவிஎஸ் நகர் சந்தானம் ரோடு பகுதியில் அரைகுறையாக சாலை போட்டு உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அமைப்பதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும் தரமற்ற சாலை அமைத்து இருப்பதால் மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீண்டும் தரமான சாலை அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஒரு மழை பெய்தால் சாலை அனைத்தும் பெயர்ந்து விடும் எனவும் மேலும் வெயில் காலம் என்பதால் சாலையில் கனரக வாகனங்கள் ஏதேனும் சென்றால் சாலை மிகப்பெரிய பள்ளம் உருவாகும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!