இராமநாதபுரம் நகர் பாஜக., புதிய நிர்வாகிகள் தேர்வு மாவட்ட பாஜக., அலுவலகத்தில் ( அரண்மனை வளாகம், தாமரை இல்லம்) நடந்தது. மாவட்ட தலைவர் கே.முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் ஜி.குமார், மாவட்ட செயலர் ஆர்.மணிமாறன் முன்னிலை வகித்தார். தேர்வு செய்யப்பட்ட, புதிய நிர்வாகிகளை நகர் தலைவர் ஆர்.வீரபாகு அறிவித்தார்.நகர் பொதுச்செயலர்களாக பி.நவநீதன், என்.மாரிமுத்து, நகர் துணைத்தலைவர்களாக எஸ்.ராகேஷ் குமார், கே.தர்மராஜ், வி.ராஜேஸ்வரி, வி.ஜெகன் பிரசாத், நகர் செயலர்களாக எம்.பூபதிராஜா, ஆர்.வி.சரவணன், நகர் பொருளாளராக டி.கதிரேசன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் கே.முரளிதரன், மாவட்ட பொதுச்செயலர் ஜி.குமார், மாவட்ட செயலர் ஆர்.மணிமாறன், நகர் தலைவர் ஆர்.வீரபாகு உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்
இராமநாதபுரம் நகர் பாஜக., புதிய நிர்வாகிகள் தேர்வு
எழுதியவர்: mohan March 10, 2020, 9:48 am




You must be logged in to post a comment.