திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சக துறையின் திண்டுக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா என் . ஊத்துப்பட்டி பகவான் இளைஞர் நற்பணி மன்றமும் இணைந்து இளைஞர்களுக்கு கருத்து
அடிப்படையிலான விழிப்புணர்வு மற்றும் கல்வி குறித்த கருத்தரங்கம் திண்டுக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் சரன் வி கோபால் தலைமையில் நடைபெற்றது. கொடைக்கானல் பாவம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுப்பையா, கோம்பை பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் சிவமணி வரவேற்று பேசினார். கருத்தரங்கில் அரசு தரப்பில் இன்றைக்கு நடத்தப்படும் கல்வி குறித்தும், மத்திய மாநில அரசாங்கத்தின் நவீன கல்விமுறையில் மாற்றம் குறித்தும், அன்றாட அடிப்படை கல்வி குறித்தும், மற்றும் கட்டுரைப் போட்டிகள் பேச்சுப் போட்டிகள் கத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஷீல்டு அமைப்பு இயக்குனர் இவான்ஸ்டின் சுந்தர்ராஜ்,நேரு இந்திரா இளைஞர் மன்ற இளைஞர்கள் தீனதயாளன், அலெக்ஸ்பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர். ம. ராஜா




You must be logged in to post a comment.