18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உச்சிப்புளி அருகே குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் முழக்க தர்ணா போராட்டம்

உச்சிப்புளி அருகே குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் முழக்க தர்ணா போராட்டம்

எழுதியவர்: mohan March 9, 2020, 4:40 pm

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு கருப்பு சட்டங்களை திரும்ப பெறக்கோரி இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புதுமடத்தில் எஸ்டிபிஐ., கட்சி சார்பில் தொடர் முழக்க தர்ணா போராட்டம் நடந்தது. எஸ்டிபிஐ., கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. அஜ்மல் சரிபு (மண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்) தலைமை வகித்தார். உறுப்பினர் அகமது தீன் வரவேற்றார்.எஸ்டிபிஐ., கட்சி மாநில செயலர் அபுபக்கர் சித்திக், மாவட்ட செயலர் அஸ்கர் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினர். எஸ்டிபிஐ., கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. அஜ்மல் சரிபு கூறுகையில், இந்த தொடர் முழக்க தர்ணா போராட்டம் மார்ச் 7-10 வரை தினமும் மாலை 5 மணி முதல் இரவு வரை நடைபெறுகிறது .இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்றார். ஜாபர் கான் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!