17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் அருகே குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம்

ராமநாதபுரம் அருகே குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம்

எழுதியவர்: mohan March 9, 2020, 12:52 pm

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு கருப்பு சட்டங்களை திரும்ப பெறக்கோரி ராமநாதபுரம் அருகே எக்ககுடி ஜமாத்தார் மற்றும் முஸ்லிம் வாலிபர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. எக்ககுடி ஜமாத் தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். அப்துல் ரஹீம், அஸ்கர் அலி, காசிம், சதாம் உசேன் முன்னிலை வகித்தனர். எக்ககுடி தலைமை இமாம் முஹமது ஜரீத் அன்வாரி வரவேற்றார். துணை இமாம் முஹமது ரியாஸ் கிராத் ஓதினார். எஸ்டிபிஐ., கட்சி மாநில பொதுச்செயலர் பி.அப்துல் ஹமீது, தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, இஸ்லாமிய கூட்டமைப்பு ராமநாதபுரம் நகர் தலைவர் கே.ராஜா உசேன், மேலசிக்கல் இமாம் ஷபிலுர் ரஹ்மான் ஜைனி, ஆல் இந்தியா இமாம் கவுன்சில் நிர்வாகி பஷீர் அலி, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இப்ராஹிம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முஸ்லிம் வாலிபர் சங்க கவுரவத் தலைவர் எஸ்.செய்யது அஹமது நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!