18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெண் காவல் அதிகாரிகளை ஒன்றிணைத்து மகளிர் தின கொண்டாட்டம்.

பெண் காவல் அதிகாரிகளை ஒன்றிணைத்து மகளிர் தின கொண்டாட்டம்.

எழுதியவர்: mohan March 9, 2020, 12:06 pm

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  மதுரை மாநகரில் பணிபுரியும் 700 க்கும் மேற்பட்ட பெண் காவல் அதிகாரிகளை ஒரே இடத்திற்கு வரவழைத்து தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். பெண்கள் அனைவரும் மிகவும் நேர்மையாகவும், சிறப்பாகவும் பணிபுரிவதாகவும் அவர்களை மதுரை மாநகரில் தற்போது ரோந்து பணியில் உள்ள ஐந்து DELTA வாகனங்களில் பெண் அதிகாரிகளையும் பணியில் அமர்த்தப்போவதாகவும் உறுதியளித்தார். மேலும் பெண் அதிகாரிகள் பணியில் முழு ஈடுபாட்டுடன் இருப்பதைப்போல குடும்பத்திலும் அதிக அக்கறை காட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பெண் காவல் அதிகாரிகள் மிகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் மதுரை மாநகரில் பணிபுரிவதை கண்டு தான் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்தார். இதுவரை காவல் ஆணையர் அவர்களின் குறைதீர்க்கும் நாட்களில் பெண்கள் யாரும் புகார் கொடுக்க வரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!