17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பழைய 25 பைசா கொண்டுவந்த 100 பெண்களுக்கு அரை பிளேட் பிரியாணியை தனியார் ஓட்டல் ஒன்று வழங்கியது.

திண்டுக்கல்லில் உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பழைய 25 பைசா கொண்டுவந்த 100 பெண்களுக்கு அரை பிளேட் பிரியாணியை தனியார் ஓட்டல் ஒன்று வழங்கியது.

எழுதியவர்: Askar March 8, 2020, 10:53 pm

திண்டுக்கல்லில் உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பழைய 25 பைசா கொண்டுவந்த 100 பெண்களுக்கு அரை பிளேட் பிரியாணியை தனியார் ஓட்டல் ஒன்று வழங்கியது.

உலக பெண்கள் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் பெண்களுக்கென நடத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள முஜிப் பிரியாணி ஹோட்டல் உரிமையாளர் பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் பழைய 25 பைசா நாணயம் கொண்டு வரும் பெண்களுக்கு அரை பிளேட் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து இன்று காலை இந்த பிரியாணி கடைக்கு 25 பைசா கொண்டு வந்த பெண்களுக்கு ரெப்ளைட் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. பெண்கள் கூட்டம் அதிக அளவில் கூறிய காரணத்தினால் கூடுதலாக 50 பெண்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது இதுகுறித்து கடை உரிமையாளர் முஜீப் கூறியதாவது, குழந்தைகள் தினத்தினை கொண்டாடும் வகையில் பழைய ஐந்து பைசா நாணயத்திற்கு அரை பிளேட் பிரியாணி வழங்கினோம். அதன்பின்னர் நமது தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் 5 திருக்குறள்களை ஒப்புவித்த பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது. இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களை போற்றும் வகையில் பழைய 25 பைசா நாணயம் கொண்டு வந்த 150 பெண்களுக்கு அரை பிளேட் பிரியாணி கொடுத்தோம். இதனை ஒரு சமூக அக்கறையோடு செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

திண்டுக்கல் செய்தியாளர் லக்ஷ்மணன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!