17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது..

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது..

எழுதியவர்: Askar March 8, 2020, 10:30 pm

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது..

உலக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் திண்டுக்கல்லில் கடந்த இரு தினங்களாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் சார்பில் பெண்களுக்கென பிரத்தியோக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பெண்கள் உடற்பயிற்சி கூட வளாகத்தில் இலவச முழு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு பரிந்துரை செய்தனர் இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!