17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்தியா எங்கள் தேசம்!இஸ்லாம் எங்கள் சுவாசம்!

இந்தியா எங்கள் தேசம்!இஸ்லாம் எங்கள் சுவாசம்!

எழுதியவர்: Askar March 8, 2020, 7:58 pm

இந்தியா எங்கள்தேசம்! இஸ்லாம் எங்கள்சுவாசம்!

கவிஞர்,கப்ளிசேட்

பகுதி-3

யூதர்களின் மரபணுவும்,பிராமணர்களின் மரபணுவும்(DNA)ஒரேமாதிரி இருப்பதாகஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யூதர்கள் அதிகம் பேசிய ஹிப்ரு மொழிக்கும் சமஸ்கிருதத்திற்கும் நெருங்கியதொடர்பிருப்பதாக அறியப்படுகிறது.

யூதராகவும், பிராமணராகவும் மற்ற மத்தினர் மாறமுடியாது.

இரண்டு பெயர்களில் வாழும் இந்த இனத்தவர்களே உலகின் தலைசிறந்தவர்களாக விளங்குகின்றனர்.

இந்தியாவிற்கு கைபர்-போலன் கணவாய் வழியாக வந்து ஆடுமேய்த்து, யாகங்கள்செய்து, அதில் மிருகங்களை பலிகொடுத்து மாமிசம் உண்டு இறுதியில் மன்னர்களை வசியப்படுத்தி தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள்.

இவர்களே இந்து தர்ம (மனுதர்மம்) சாஸ்திரங்களின் அடிப்படையில் இந்தியாவை கட்டமைக்க ஒரு சிவாஜியைப்போல அல்லது ஹிட்லர், முசோலினியைப்போல வலுவான ஒரு தலைமை நமக்கு கிடைக்கவேண்டும்.

அதுவரை இந்து ராஜ்யத்தை இந்தியாவில் கட்டமைக்க முடியாது. என்பதை உணர்ந்த இந்த பாசிசவாதிகள் அதற்கான திட்டமிடலை சரியாக செய்தனர்.

அதற்காகஜெர்மனியின் இளைஞர்அமைப்பு, இத்தாலியின் பலில்லா மற்றும் பாசிச கட்டுமான அமைப்புகளைப்போல இந்தியாவில் வலுவானதாக ஒரு அமைப்பை உருவாக்கி மக்களிடையே இந்து எழுச்சியை உருவாக்கவேண்டும் என்று திட்டமிட்டனர்.

மத்திய இந்து இராணுவக்கழகம் என்றஅமைப்பை நிறுவி,அதன் மூலம் இராணுவப் பயிற்சிகளை அளிப்பதும், இந்துசனாதன தர்மங்களையும், போதிப்பதும் அதன் குறிக்கோளாக ஆக்கினர்.

1925 ஆம் ஆண்டு செப்டம்பர்27 ஆம் நாள் விஜயதசமி தினத்தில் நாக்பூரில் ஐந்து சித்பவன நம்பூதிரி பிராமணர்களால் ஆரம்பிக்கப்பட்டது RSS (ராஷ்டீரிய சுயம் சேவக் சங்க்). இதன் நிறுவனத்தலைவராக பி.கே ஹெட்கோவர் திகழ்கிறார். பிற தலைவர்களாக குருஜி கோல்வாக்கர், சாவார்க்கர், பி.எஸ்மூஞ்சே, சியாமபிரசாத் முகர்ஜி போன்றவர்கள் திகழ்கிறார்கள்.

இந்து தேசியத்தை இந்தியாவில் கட்டமைத்து RSS ன் தொண்டரணி என்ற சீருடையுடன் கூடிய இராணுவக் கட்டமைப்பான படையை உருவாக்கி இந்தியாவை இந்துராஷ்டிரமாக கட்டமைத்து ஆட்சி செய்வதே இவர்களின் பிரதான நோக்கமாகும்.

அதற்காக இவர்கள் தங்களின் கொடியாக ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடியை வைத்துக்கொண்டனர். தேசியக்கொடியை ஏற்றாமல் அவர்களின் ஸ்வஸ்திக் கொடியையே அவர்களின் நாக்பூர் அலுவலகத்தில் பறக்கவிட்டார்கள்.

அவர்களின் நூற்றாண்டு கனவு இன்று பலித்திருக்கிறது.

கிடைத்த வாய்ப்பை விட்டுவிடுவார்களா?

இறைவன் நாடினால் தொடர்ந்து பேசுவோம்…!

கப்ளிசேட் 08.03.20

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!