17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிவகிரியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா-வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்பு..!

சிவகிரியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா-வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்பு..!

எழுதியவர்: Askar March 7, 2020, 9:51 pm

சிவகிரியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா-வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்பு..!

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக உலக மகளீர் தினம் சிவகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு சிவகிரி வருவாய் வட்டாட்சியர் கிருஷ்ணவேல் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சாந்தி மற்றும் குடிமைபொருள் வழங்கல் வட்டாட்சியர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகளீர் தின சிறப்புகள் குறித்து திரு. செ.மைதீன் பட்டாணி தனித்துணை வட்டாட்சியர் (தேர்தல் ) (தென்காசி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர்) உரை நிகழ்த்தினார்.வரவேற்புரை வட்டத் தலைவர் மணிகண்டன் ஆற்றினார்.

மகளிர் தின விழா ஏற்பாடுகளை மகளிர் சங்க தோழர்கள் சுந்தரி, தேவி, கவிதா செல்வி ராஜ துரைச்சி, குரு லட்சுமி ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

மேலும் விழாவில் வாசு வருவாய் ஆய்வாளர் சிவனு பாண்டி, அலுவலக வருவாய் உதவியாளர் குகன், அருண் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியாக வட்ட செயலாளர் திருமதி ராஜாத்தி நன்றி கூறினார். மகளீர் தினம் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!