17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அம்மைய நாயக்கனூர் தொடக்க பள்ளியில், பெண்கள் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது!

அம்மைய நாயக்கனூர் தொடக்க பள்ளியில், பெண்கள் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது!

எழுதியவர்: Askar March 7, 2020, 8:28 pm

அம்மையநாயக்கனூரில் பெண்கள் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா , கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் அரசு தொடக்க நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர் தலைமையில் பெண்கள் தின விழா நடைபெற்றது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம் , கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன் , ஒன்றிய ஆசிரியர் பெற்றோர் சங்க தலைவர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் . அம்மையநாயக்கனூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் தண்டபாணி வரவேற்று பேசினார். விழாவில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் கலந்துகொண்டு பெண்களை வாழ்த்தி, நவீன முறையில் கேக் வெட்டியும், ஆசிரியைகளுக்கு நினைவுப் பரிசாக கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக செம்பில் செய்யப்பட்ட செம்பை பரிசாக வழங்கிக் கொண்டாடினார்கள். இவ்விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர், அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் காசி பாண்டி, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அதிமுக கழக அவைத்தலைவர் சுப்பிரமணியன், மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!