17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் பெங்களுரு சாலையில் உள்ள சிகரம் பன்னாட்டுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது..

செங்கம் பெங்களுரு சாலையில் உள்ள சிகரம் பன்னாட்டுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது..

எழுதியவர்: Askar March 7, 2020, 8:17 pm

செங்கம் பெங்களுரு சாலையில் உள்ள சிகரம் பன்னாட்டுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிர்வாக குழு தலைவர் பேராசிரியர் வணங்காமுடி தலைமைதாங்கினார். நிர்வாக இயக்குநர் டாக்டர் வெற்றிக்கனி முன்னிலை வகித்தார் நிர்வாக இயக்குநர் இலக்கியா வரவேற்றுபேசினார். இதில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் அப்துல்காதர் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கிவைத்து பேசினார். அப்போது நம்நாட்டில் சர்.சி.வி.ராமன் கணிதமேதை ராமானுஜம் மற்றும் அப்துல்கலாம் போன்ற பல விஞ்ஞானிகள் இருந்துள்ளனர் அவர்களை போல இன்றைய இளைஞர்கள் உருவாக வேண்டும் அறிவியல் என்பது மனித சிந்தனையின் வெளிப்பாடு ஆகும் இங்குள்ள மாணவர்கள் சிகரம் தொட்டவர்களாக வரவேண்டும் என பேசினார் நிகழ்ச்சியில் தமிழ் இயக்க பொருப்பாளர்கள் பதுமனார் திருவண்ணாமலை கெங்குசாமிநாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் சின்னராஜ் கணேசர் குருப்ஸ் வழக்கறிஞர் கஜேந்திரன் மற்றும் வட்டார கல்வி அலுவலர் சுப கோவிந்தராஜன் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் பி.கே.கோவிந்தராஜன் நாகா ராஜேந்திரன் பெற்றோர்கள் ஆசிரியர்கள மாணவர்கள் கலந்துகொண்டனர் முடிவில் பள்ளி முதல்வர் ஆரோக்கிய தாஸ் நன்றி கூறினார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!