17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் பலி

இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் பலி

எழுதியவர்: mohan March 7, 2020, 7:18 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் 2 வரும் ஹர்பித் சிங்– மற்றும் சஞ்சு ஜி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் திருப்பரங்குன்றத்தில் இருந்து அவனியாபுரம் நோக்கி அதிவேகமாக சென்றுள்ளார்கள். கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் தனியார் கல்லூரிக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவற்றில் மீது மோதி சுமார் 20 அடி தூரத்திற்கு இழுக்கப்பட்டது .இதில் சம்பவ இடத்திலேயே ஹர்பித் சிங் என்கின்ற மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மாணவர் சஞ்சு ஜி சங்மா ஆபத்தான நிலையில் 108 வாகனம் மூலமாக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திடீர்நகர் போக்குவரத்து உளவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் அதிவேகமாக வாகனத்தை இயக்கியது விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் ஹெல்மெட் அணியாதது  உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!