17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுமக்கள் பாராட்டும் காவல்துறை ஆணையாளர்

பொதுமக்கள் பாராட்டும் காவல்துறை ஆணையாளர்

எழுதியவர்: mohan March 7, 2020, 5:44 pm

மதுரை காவல்துறை ஆணையாளர் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை காக்க வைக்காமல் நேரடியாக பொதுமக்களிடம் சென்று புகாரை பெற்றார். மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்துக்கு மாநகர காவல்துறை ஆணையாளர் நேரடியாக பார்த்து தினசரி பலர் புகார் கொடுப்பதற்காக அதிக அளவில் பொதுமக்கள் வந்துகொண்டிருந்தார்கள். இதனால் அவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட் டது .இதனை அறிந்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் பொதுமக்கள் புகார் படும் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நேரடியாகவே சென்று பொதுமக்களிடம் புகாரை பெற்றார் .இதனால் பொதுமக்களுக்கு நேர மிச்சமும் காத்திருக்க அவசியம் இல்லாமலும் இருந்தது. இதனால் புகார் கொடுத்து வந்திருந்த பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. காவல்துறை ஆணையர் பொதுமக்களிடம் நேரடியாக வந்து புகாரை பெற்றது பெரும் வரவேற்ப்பை பெற்றது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!