18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் சிறப்பு குறைதீர் கூட்டம்- மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

தென்காசி ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் சிறப்பு குறைதீர் கூட்டம்- மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

எழுதியவர்: mohan March 7, 2020, 5:14 pm

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.தென்காசி சுபம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மூன்றுசக்கர வண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, செயற்கைக் கால், செயற்கைக் கை, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த பல்வேறு மனுக்களை மாற்றுத்திறனாளிகள் அளித்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவிட்டார்.

இந் நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 180 பேருக்கு ரூ.32 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பராமரிப்பு உதவித்தொகை, 14 பேருக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வங்கி கடன் மானியம், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் 27 பேரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்து 41 ஆயிரம் இறுதிச் சடங்கு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மரகதநாதன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்திகுளோரி எமரால்ட், ஆவின் உதவி இயக்குநர் அனுஷாசிங், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார் உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகள்,அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!