17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா

கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா

எழுதியவர்: mohan March 7, 2020, 5:07 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியர் மற்றும் அதிக தேர்வு விழுக்காடு கொடுத்து சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. கல்லூரி தலைவர் எஸ்.எம்.யூசுப் சாகிப் தலைமை வைத்தார். கல்லூரி முதல்வர் அ.அலாவுதீன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி துணை முதல்வர் என். ராஜேந்திரன் வரவேற்றார் . கல்வித் துறைகளில் சாதனை புரிந்த மாணவர்கள்:பாடங்களில் அதிக விழுக்காடு பெற்றுத்தந்து சாதனை புரிந்த ஆசிரியர்களுக்கு ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் ஏ.எஸ்.மாரிமுத்து பரிசு, சான்றிதழ் வழங்கினார்.விளையாட்டு துறைகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்குமாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பி. செந்தில்குமார் பரிசு, சான்றிதழ், கேடயம் வழங்கினார். முகமது சதக் பொறியியல் கல்லூரி டீன் முகமது சகபர், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இ. ரஜபுதீன் , பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டி.அழகிய மீனாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணை முதல்வர் அ.ஷேக் தாவூது, துறைத் தலைவர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கண்டனர். விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை முகமது சதக் அறக்கட்டளை தலைவர், இயக்குநர், செயலர் பாராட்டினர். ஆர்.யோசுவா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!