17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கூலித் தொழிலாளி மனைவி வலிப்பு நோயால் பரிதாப சாவு

கூலித் தொழிலாளி மனைவி வலிப்பு நோயால் பரிதாப சாவு

எழுதியவர்: mohan March 7, 2020, 1:07 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி  தோட்ட குடியிருப்பை சேர்ந்த வேலுச்சாமி மனைவி ரேவதி 30. இவருக்கு பல  ஆண்டுகளாகவே வலிப்பு நோய் இருந்துள்ளது.    இந்த நோய்க்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் முற்றிலும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி வீட்டில் மாலை நேரத்தில் சமையல் செய்து கொண்டிருந்த போது வலிப்பு நோய் திடீரென வந்ததால் அப்படியே நிலைதடுமாறி கீழே விழுந்ததில் எதிர்பாராவிதமாக அடுப்பில் இருந்த தீ ரேவதி மீது பிடித்து எரிந்ததால்  அலறல் சத்தம் போட்டார்.         இதை அறிந்த தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கணவர் வேலுச்சாமி மற்றும் உறவினர்கள் உதவியோடு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரவியிடம் கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.        தீ விபத்தில் இறந்துபோன ரேவதிக்கு சாதனா என்ற 6 வயது குழந்தையும், திருப்பதி என்ற 9 மாத கைக்குழந்தையை உள்ளார்கள். குழந்தைகளைப் பரிதவிக்க விட்டு இறந்து போனதை அறிந்த கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்.

நிலக்கோட்டை செய்தியாளர்.ம. ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!