17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி வெட்டிபடுகொலை …..

குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி வெட்டிபடுகொலை …..

எழுதியவர்: mohan March 7, 2020, 12:18 pm

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித். இவர் உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கறி ஒராக பணியாற்றி வருகிறார். இன்று நீதிமன்றத்தில் தனது பணியை முடித்துவிட்டு கோவிந்தன்பட்டி அருகே குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.காரிலிருந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாறியாக கையில் கொண்டு வந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினnர்கள் இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் பற்றி தகவல் தெரிந்த உத்தமபாளையம் போலிசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி தேனி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காஅனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிபிரிவு போலிசாரை அனுப்பி கொலைக்கான காரணம் குறித்தும் குற்றவாளிகள் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். இக்கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது….

இவண்.  சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!