17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் உடலில் பச்சை குத்திய வாலிபருக்கு எச்சரிக்கை செய்த தாசில்தார்

நிலக்கோட்டையில் உடலில் பச்சை குத்திய வாலிபருக்கு எச்சரிக்கை செய்த தாசில்தார்

எழுதியவர்: mohan March 7, 2020, 12:01 pm

தேனி மாவட்டம், தேனியை சேர்ந்த பாலகிருஷ்ணன்  40. இவர் நிலக்கோட்டை பேரூராட்சி அருகே நேற்று நாகரீக முறையில் பச்சை குத்துவது என அறிவிப்பு செய்து வந்த பொதுமக்களுக்கு பச்சை குத்திக் கொண்டிருந்தார்.அப்போது இதை கவனித்த நிலக்கோட்டை தாசில்தார் யூஜின் பச்சை எப்படி குத்துகிறார் என கவனித்தார். இந்த பாலகிருஷ்ணன் ஒரு ஊசியை பலருக்கு பயன்படுத்தி பச்சை குத்தி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிலக்கோட்டை தாசில்தார் யூஜின் உடனடியாக பாலகிருஷ்ணனிடம் சென்று தற்போது பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே நீ ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்தி வருகிறாய் இதுபோன்ற செயலைச் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுவோம் என எச்சரிக்கை செய்தும், அறிவுரையும் செய்தும் அனுப்பி வைத்தார். சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலக்கோட்டை செய்தியாளர். ம. ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!