17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்தியா எங்கள்தேசம்!இஸ்லாம் எங்கள் சுவாசம்!

இந்தியா எங்கள்தேசம்!இஸ்லாம் எங்கள் சுவாசம்!

எழுதியவர்: Askar March 7, 2020, 9:17 am

இந்தியா எங்கள்தேசம்! இஸ்லாம் எங்கள் சுவாசம்!

கவிஞர்,கப்ளிசேட்

பகுதி-2

ராணுவப்படைப் பிரிவுகள் தடுமாறத்துவங்கின. ரகசியம் கசிந்துவிட்டதையும் உளவுப்பிரிவுகள் விழித்துக் கொண்டதையும் புரிந்துகொண்ட ராணுவப்பிரிவுகள் ரகசியமாக தன் இருப்பிடங்களுக்கு திரும்பின.

அடுத்த ஒருமணிநேரத்தில் தனிராணுவ விமானத்தில் வந்திறங்கிய ராணுவத்தளபதி உடனடியாக விசாரணைக்கு உத்திரவிட்டார்.

இதுவரை எந்தக்குற்றவாளியும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

இதை வெளிப்படையாக பேசிய அன்றைய ஒரு அமைச்சரின் வாய்கள் பாசிசவாதிகளால் அடைக்கப்பட்டன.

கொஞ்சம் பயமாக இருக்கிறதல்லவா? ஆட்சியில் இல்லாதபோது ஒருவேளை தேர்தலில் வெல்ல முடியாவிட்டால் இப்படியாவது நாட்டை பிடிக்கவேண்டும் என்பது அவர்களது கனவு.

ஒருவழியாக வளர்ச்சி என்றும் அயோத்தி என்றும் ஏராளமான பொய்வாக்குறுதிகளை அள்ளி இரைத்தனர்.

ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணம். கருப்புப்பணத்தை மொத்தமாக மீட்டுவந்து இந்தியாவில் பாலாறையும் தேனாறையும் ஓடவிடுவோம் என்று பொய்யுரைத்து ஆட்சியை முதல்முறையாக பிடித்தார்கள்.

முஸ்லீம்களின் ரத்தத்தை ஓடவிட்டார்கள். வன்முறைகளை வரம்பில்லாமல் செய்தார்கள்.

வெளிப்படையாகவே முஸ்லீம்களை கருவறுக்கும் வேலைகளை மனிதநேயங்களை கழற்றிவைத்துவிட்டு செய்ய ஆரம்பித்தார்கள்.

குஜராத் மாடல் என்ற இன அழிப்பை அரங்கேற்றினார்கள். இன்றைக்கு அதே மாடலை டெல்லியில் அரங்கேற்றி இருக்கிறார்கள்.

இதில் எந்த இந்துமக்களும் கலந்து கொள்ளவில்லை. இந்துத்துவ வெறியர்களும், நன்றாக பயிற்சிபெற்ற கூலிப்படையுமே வெறித் தாண்டவமாடி இருக்கிறார்கள்.

முதல் ஐந்தாண்டுகளில் தங்களுக்கான அடித்தளங்களை அமைத்துக் கொண்டார்கள்.

ஆட்சி அதிகாரங்களின் அத்தனை துறைகளிலும், நீதித்துறையிலும், தங்களின் கைக்கூலிகளையே நிரப்பினார்கள்.

தேர்தல் ஆணையம் முதல் ஊடகத்துறைவரை காவிகளால் கறைபடிந்தது.

இந்துத்துவாவை கிளைபரப்ப துடிக்கிற பாசிசவாதிகளின் வரலாறும் இலக்கும் என்ன?

இறைவன் நாடினால் தொடர்ந்து பேசுவோம்…!

கப்ளிசேட் 07.03.20

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!