17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தகனம்:-திமுக சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பு!

மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தகனம்:-திமுக சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பு!

எழுதியவர்: Askar March 7, 2020, 8:45 am

மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தகனம்:-திமுக சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பு!

கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் க.அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவை ஒட்டி கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறவையொட்டி மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் 43 ஆண்டுகள் திமுக பொதுச் செயலாளராக இருந்த க. அன்பழகன் திமுக ஆட்சியில் சமூக நலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் திகழ்ந்தவர் பேராசிரியர் க. அன்பழகன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழாய்ந்த பேராசிரியராக விளங்கிய க. அன்பழகன் மறைவை ஒட்டி திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

மேலும் திமுக கொடிகள் அனைத்தும் 7 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!