17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொண்டி அருகே பெண் போலி டாக்டர் கைது

தொண்டி அருகே பெண் போலி டாக்டர் கைது

எழுதியவர்: mohan March 6, 2020, 7:26 pm

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அண்ணா நகர் தொண்டி ராஜ் மகன் முருகேசன். கடந்த பிப்.15 ல் உடல் நலம் பாதித்த இவரது தாய்அழகம்மாளை (68), தொண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தவறான சிகிச்சையால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அழகம்மாள் இறந்ததார். இது குறித்து தொண்டி போலீசில் முருகேசன் புகார் அளித்தார். இதன்படி தொண்டி போலீசார் விசாரித்தனர். மருத்துவப் படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் பாபி ராஜலட்சுமி (எ) ராஜலட்சுமி 32 ஐ போலீசார் கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக காரைக்குடி சுரேந்திரன், தொண்டி அருகே கொடிபங்கு செல்வம், தொண்டி பீட்டர், கலந்தர் ஆஷிக் அஹமது ஆகியோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!