17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நரிக்குறவ பெண்களை பாராட்டிய போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்.

நரிக்குறவ பெண்களை பாராட்டிய போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்.

எழுதியவர்: mohan March 6, 2020, 6:29 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சமுத்துவபுரத்தில் பெண்களுக்கான மத்திய அரசின் சுயவேலைவாய்ப்பு திட்ட பயிற்சி நடைபெற்றது. இதில் நரிக்குற பெண்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு குறித்தும், சுயாதாழில் செய்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட பெண்கள் உறுதி மொழியும் ஏற்றுக் கொண்டனர். இதில் போத்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் உக்கிரபாண்டி கலந்து கொண்டார். இதில் நரிக்குறவ பெண்கள் தாங்கள் உருவாக்கிய அணிகலன்கள், ஊசி, பாசிமாலைகள் உள்ளிட்டவைகளை பார்வைக்கு வைத்தனர். அதனை பார்த்த போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி நரிக்குறவ பெண்களை பாராட்டினார். இந்த நிகழ்ச்சி தொடங்குவது முன் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!