17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்ட சுமார் 15 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்-புளியரை சோதனைச் சாவடியில் சிக்கியது…

கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்ட சுமார் 15 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்-புளியரை சோதனைச் சாவடியில் சிக்கியது…

எழுதியவர்: mohan March 6, 2020, 6:22 pm

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு புளியரை வழியாக குட்கா மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் 06.03.2020 இன்று கேரளாவிற்கு செல்லும் ஒரு லாரியில் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக தனிப்பிரிவு காவலர் மஜித்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.அத்தகவலை தொடர்ந்து தனிப்பிரிவு காவலர் மஜித், எஸ்ஐ இராஜேஸ்வரன், எஸ் எஸ் ஐ மாரியப்பன் மற்றும் தலைமைக் காவலர் செல்லப்பாண்டி ஆகியோர் தலைமையில் காவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது புளியரை சோதனைச்சாவடி அருகே உள்ள ஒரு லாரியை சோதனை செய்த போது அதில் 15 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. லாரியில் வந்த கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த தில்ஷா மற்றும் அல்அமீன் , முகமது நசீர் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். குட்கா ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. உணவு கடத்தல் தனிபிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!