17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்தியனுக்கே.விசாரணையா. வீணர்களே மதுரை மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபப்பு

இந்தியனுக்கே.விசாரணையா. வீணர்களே மதுரை மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபப்பு

எழுதியவர்: mohan March 6, 2020, 12:45 pm

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2. இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.கடந்த 19-ந்தேதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிரேன் விழுந்து உதவி இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேரின் மீது உயிரிழப்பு ஏற்படுத்துதல், கவனக்குறைவாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி அவரிடமும் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதை கண்டித்து மதுரை மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் மாநகர் கமலஹாசன் ரசிகர்கள் சார்பாக இந்தியனுக்கே விசாரணையா வீணர்களே என்ற தலைப்பில் வீரமும் நேர்மையும் நம்மவரின் சொத்து இதுதான் தமிழனின் கெத்து. குனிந்து கும்பிடு போடும் முட்டாள் அரசியல்வாதிகளே முடிந்தால் களத்தில் வந்து மோது இல்லை தமிழ்நாட்டை விட்டு ஓடு என்ற வாசங்கள் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!