17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்தியா எங்கள்தேசம்!இஸ்லாம் எங்கள் சுவாசம்!

இந்தியா எங்கள்தேசம்!இஸ்லாம் எங்கள் சுவாசம்!

எழுதியவர்: Askar March 6, 2020, 8:21 am

இந்தியா எங்கள்தேசம்! இஸ்லாம் எங்கள் சுவாசம்!

கவிஞர்,கப்ளிசேட்

பகுதி-1

புது டெல்லி…! 2012 ஏப்ரல் மாதத்தின் பரபரப்பான மாலைப்பொழுது..! சண்டீகரின் ராணுவத்தளங்களில் இருந்து இரண்டு படைப்பிரிவுகள் வலிமையான டேங்கர்களோடு (Tankers) புதுடெல்லியை நோக்கி புறப்பட்டன.

டெல்லியில் அதற்கான எந்த அவசியங்களும் நிகழவிலலை. ராணுவ படைப்பிரிவுகள் வருமளவிற்கு எந்த சிறப்பு நிகழ்வுகளும் நடைபெறவில்லை.

அந்தப்படை பிரிவினருக்கு அவர்களின் விசுவாச மேலிடத்திலிருந்து இடப்பட்ட கட்டளை அதிர்ச்சியானது.

ஒருபிரிவு பாராளுமன்றத்தை நோக்கியும் மற்றொன்று குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கியும் சென்று இரண்டையும் கைப்பற்றி பிறகு, தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தையும் கைப்பற்றி ,

ஒரு சிறுராணுவப்புரட்சி மூலம் நாட்டை கைப்பற்றி அரசாங்கத்தை நிறுவுவதே நாக்பூரின் இலக்கு.

இதனை மோப்பம் பிடித்த உளவுநிறுவனங்கள் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு தகவல் தெரிவித்தன.

உடனடியாக அன்றைய தரைப்படைத் தலைவரிடம் விபறம் கேட்கப்பட்டது.

அரசுமுறைப்பயணமாக மலேசியாவிலிருந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஒரு தந்திரமான ஆலோசனையை டெல்லி காவல்துறைக்கு வழங்கினார்.

உடனடியாக டெல்லி காவல்துறை ரோடுகளில் தடுப்புகளை ஏற்படுத்தி எல்லா வாகனங்களையும் சோதிக்க ஆரம்பித்தனர்.

ரோடுகளில் வாகனங்களின் குவியலால் ரோட்டில் எந்த வாகனமும் சட்டென நகரமுடியவில்லை.

டேங்கர்களும், ராணுவப்பிரிவும் என்ன செய்தன?

இறைவன் நாடினால் தொடர்ந்து பேசுவோம்…!

(04.04.2012 இந்தியன்* *எக்ஸ்பிரஸ் ஆங்கில பத்திரிக்கையின் டெல்லி பதிப்பில் வெளியான செய்தியை ஆதாரமாக வைத்து எழுதிப்பட்டது.)

கப்ளிசேட் 6.03.20

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!