சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் பிப்.10 முதல் பிப். 29 வரை பேரிடர் மேலாண் மீட்பு பயிற்சி நடைபெற்றது. இதில்ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை போலீகாரர்கள் விக்னேஸ்வரன் பிசி 711, முத்தமிழன் பிசி 591, கார்த்திக் பிசி 574, ராஜபாண்டி பிசி 722, கபில்தேவ் பிசி 696 ஆகியோர் உள்பட 13 கடலோர காவல் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் ராமநாதபுரம் போலீஸ்காரர் விக்னேஸ்வரன் பிசி 711, ஒட்டு மொத்த போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் கோப்பையை தட்டிச் சென்றார்.பயிற்சி முடித்து திரும்பிய போலீஸ்காரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி. ராமநாதபுரம் மாவட்ட போலீசார் முதலிடம்
எழுதியவர்: mohan March 5, 2020, 7:59 pm




You must be logged in to post a comment.