சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை இ. காட்டூர் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகின்றன. இவ்விழாவினையொட்டி சிறப்பு நடன நிகழ்ச்சி 4 ஆம் தேதி புதன்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில்பெண்கள் நடனமாடும் மேடைபகுதிக்கு பார்வையாளர்கள் யாரும் கிட்டே வராத அளவிற்கு சீமை முள் செடிகளை வெட்டி போட்டு வைத்துள்ளனர். மேலும் 50 க்கும் மேற்பட்ட அதிரவைக்கும் ஒலிபெருக்கியை வைத்துள்ளனர். பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்வு நேரம் என்பதால் மாணவர்களின் கவனம் சிதறக்கூடும் என்றும் கிராமம் தோறும் நடைபெறும் மாரியம்மன், காளியம்மன் மற்றும் உள்ளூர் திருவிழாக்களுக்கு இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஒலிபெருக்கியை வைப்பதும், நடன நிகழ்ச்சி வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென சமூக சிந்தனையாளர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் மகுடஞ்சாவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை வாய்மொழி உத்தரவு பிரபிப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒலிபெருக்கி சத்தத்தால், தேர்வு நேரத்தில் மாணவர்கள் படிப்பு பாதிப்பதாக பொதுமக்கள் புகார்..
எழுதியவர்: Askar March 5, 2020, 4:04 pm




You must be logged in to post a comment.