17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்பாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிப்பு:- திமுக எதிர்ப்பால் பரபரப்பு..

கல்பாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிப்பு:- திமுக எதிர்ப்பால் பரபரப்பு..

எழுதியவர்: Askar March 5, 2020, 3:58 pm

கல்பாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிப்பு:- திமுக எதிர்ப்பால் பரபரப்பு..

இளம்பிள்ளை அருகே கல் பாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக உறுப்பினர் வேட்பு மனு நிராகரிக் கப்பட்டு, அதிமுக உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அடுத்த வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு கடந்த 2 முறை தேர்தல் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பான்மை உறுப் பினர்கள் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 3-வது முறையாக புதனன்று மறை முகத் தேர்தல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 9 வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜம்மாள் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.

துணைத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் 2-ஆவது வார்டு உறுப்பினர் மணி மற்றும் திமுக சார்பில் 4-ஆவது வார்டு உறுப் பினர் வெங்கடாசலம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராக ரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த மணி போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டதாக தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் திருவேரங்கன் அறிவித் தார்.இதன்பின் இந்த அறிவிப்புக்கான தகவலை ஒட்டப்படாமல், ஊராட்சி அலுவலகத்தினை பூட்டி விட்டு அவசர, அவசரமாக அவர் வெளியே செல்ல முற்பட்டார். இதையடுத்து அங்கிருந்த திமுக வினர் மற்றும் பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் சென்ற காரை மறித்து, வெங்கடாசலம் மனு நிராகரிப்பு குறித்து விளக்கேட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!