17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மட்டப்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா

மட்டப்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா

எழுதியவர்: mohan March 5, 2020, 10:44 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் தலைமை தலைமை தாங்கி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், அம்மையநாயக்கனூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சேகர், மட்டப்பாறை ஊராட்சி மன்றத் தலைவர் மகேந்திரன், ஒன்றியக் கவுன்சிலர் நல்லதம்பி, பள்ளி தலைமை ஆசிரியர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர்: ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!