18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை வந்த விழிப்புணர்வு ஆட்டோ ஓட்டுனருக்கு வழிகாட்டி மனிதர்கள் பாராட்டு.

மதுரை வந்த விழிப்புணர்வு ஆட்டோ ஓட்டுனருக்கு வழிகாட்டி மனிதர்கள் பாராட்டு.

எழுதியவர்: mohan March 5, 2020, 10:36 am

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சாகுல் ஹமீது இயற்கையின் மீது பற்று கொண்டு மரங்கள் வளர்ப்பது குறித்து இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமேஸ்வரம் அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து சென்னை தலைமைச் செயலகம் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறார்.மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டனை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.உடனடியாக வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.சாகுல் ஹமீதை வரவேற்று வழிகாட்டி மணிகண்டன் பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.அவரது பசுமை விழிப்புணர்வு பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மக்கள் தொண்டன் அசோக்குமார் மற்றும் கிரி செய்தனர்.இதில் சமூக ஆர்வலர்கள் கண்ணன் தருன், லிங்கசெல்வி, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!