18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் பகுதியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்..!

செங்கம் பகுதியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்..!

எழுதியவர்: Askar March 5, 2020, 9:36 am

செங்கம் பகுதியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்..!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பொரசப்பட்டு தண்டா பகுதியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

பொரசப்பட்டு தண்டா பகுதியில் நடந்த விழிப்புணர்வு முகாம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. செங்கம் காவல்துறை ஆய்வாளர் சாலமோன் ராஜா முகாமுக்கு தலைமை தாங்கினார். முகாமில் மதுவால் ஏற்படும் தீமைகளை குறித்தும் விழிப்புணர்வு காவல்துறை ஆய்வாளர் விளக்கமாக எடுத்துக் கூறினார். முகாமில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் செங்கம் சுற்றுவட்டப் பகுதியில் இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!